திருவாரூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் அனுசரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      திருவாரூர்
thiruvarur

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜ்.ஆரின் 30வது நினைவுநாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.  

ஊர்வலம்

இதில் ஒரு பகுதியாக திருவாரூரில் நகர கழக சார்பில் நகர அலுவலகமான பனகல் சாலையிலிருந்து நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு நேதாஜிசாலை,தெற்குவீதி,கீழவீதி,வடக்குவீதி வழியாக புதுத்தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவித்து மாரியாதை செலுத்தினர்.இதில் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன்,மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்,மாவட்ட இணை செயலாளர் பாப்பாத்திமணி மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.கலியபெருமாள், எம்.ஜி.ஆர்.கருப்பையன், ரயில்பாஸ்கர், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து