தி.மலையில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
photo03

 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 30ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையட்டி திருவண்ணாமலை காந்திசிலை , வேலூர்சாலையிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் எம்ஜிஆர் திருவுருவ படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிர்வாகிகள் பங்கேற்பு

இதில் மாவட்ட கழக பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட கழக துணை செயலாளர் மாதிமங்கலம் துரை, நகர செயலாளர் ஜெ.எஸ்.செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சத்ய வி.சிவக்குமார், மாவட்ட அம்மா பேரவை தலைவர் இளவழகன், இணை செயலாளர் கராத்தே பாண்டு, துணை செயலாளர் ரேடியோ எஸ்.ஆறுமுகம், நகர தலைவர் எஸ்.பழனி உள்பட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து