டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      சென்னை
G pundi

கும்மிடிப்பூண்டி அடுத்த டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கிறிஸ்த்துமஸ் மற்றும் 2018புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

புத்தாண்டு விழா

டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், தாளாளர் டாக்டர் பழனி, இயக்குனர் பழனி, டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பிச்சைமணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். தொடர்ந்து மாணவர் இயேசு பிறப்பு குறித்து பாடல்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, இயேசு பிறப்பின் அடிப்படை அனைவரையும் நேசி என்ற பொருளில் நாடகத்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடனம் ஆடி மாணவர்களுக்கு இனிப்புகள் பரிசுகள் வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்புரையாற்றிய டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் அன்பையும் எளிமையையும் போதிக்கும் கிறிஸ்து பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற அனைத்து பண்டிகைகளும் நம் நாட்டில் சகோதர மனப்பான்மையை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது என்றும், அனைத்து மத பண்டிகைகளையும் மாணவர்கள் கொண்டாடி இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க வேண்டும் கூறி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கினார். விழா முடிவில் கல்லூரி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணண் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து