ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ஜெய் ஆகாஷ் தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் ‘தனயன்’.

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      சினிமா
Thanayan

Source: provided

தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் எனவும், ஒரு மகன் எப்படி வாழ கூடாது எனவும் மனித ஒழுக்கத்தை சொல்லும் திரைப்படம் ‘தனயன்’.இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிஸ் மும்பை ஏஞ்சல் சிங் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். U.K.முரளியின் அருமையான இசையில் 3 பாடல்கள் மற்றும் 4 சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது கதை - திரைக்கதை - இயக்கம் - N.J.சதீஷ் /வசனம் - M தியாகராஜ், ஒளிப்பதிவு தேவராஜ், இசை - U.K.முரளி, நடனம் - ரமேஷ் ரெட்டி, ரமேஷ் கமல், எடிட்டிங் - பிரேம், ஆக்சன் - பாக்க்ஷி, மக்கள் தொடர்பு - செல்வரகு, இணைத்தயாரிப்பு - R . ராஜன் , M.கருப்பையா .

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து