கிறிஸ்துமஸ் விருந்தளித்த விமல்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      சினிமா
Vmal - Kayal Anandhi

Source: provided

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் - கயல் ஆனந்தி - சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மன்னர் வகையறா’ படத்தில் இருந்து ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்கப்படுகிறது.

விமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை விமல் தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.


இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதபாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2018 ஜனவரியில் ரிலீசாக இருக்கிறது

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து