டிச 29 முதல் ஜும்ஆ - ஜங்கிளுக்கு வருக (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      சினிமா
Juma-Jungle

Source: provided

ஜோ ஜான்ஸ்டன்-இன் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கிய ஜுமாஞ்சி எனும் திரைப்படம் நினைவிருக்கலாம். கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க், 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது!

அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேட காட்சிகளின் சிருஷ்டிகர்த்தாஸ்டீபன் எல் ப்ரைஸ்- இன் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘ஜாதர - ஒரு விண்வெளி சாதனை ' வெளியானது. 1995 படத்தில் நடித்த, மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ், ஆலம் பார்ரிஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜும்ஆ - ஜங்கிளுக்கு வருக என்கிற இப்புதிய பதிப்பு, 2014 ஆம் ஆண்டு இறந்து விட்ட ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டாக்டர் ஸ்மோடர் பாவ்ஸ்டோன் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் டுவைன் ஜான்சன் நடித்துள்ள இப்படத்தில்,ஸ்பென்சர் மில்லர்-ஆக அலெக்ஸ் வோல்ஃப், ஷேக்லி ஓபெரோன் ஜாக் பிளாக், பெத்தனி வைட், மாடிசன் இஸ்மேன் மற்றும் ஃபிராங்க்ளின் ஃபைபர் வேடத்தில் கெவின் ஹார்ட்ஆகியோர் நடித்துள்ளனர்.


ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் ஜுமான்ஜி என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர்!

அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்கள் அடையப் பெறும் படிப்பினைகளுமே படத்தின் சாரம்!இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய ஜுமான்ஜி படத்தில் ஒரு விளையாட்டும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அடிப்படை. அவ்விளையாட்டு, இதில் புதியதொரு அனுபவமாக ஒரு வீடியோ கேமாக (வீடியோ கேம்)சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும்! அதுவே விளையாட்டின் விதிமுறை Henry Jackman இசையமைத்துள்ளார். க்யூலா படோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி பிச்சர்ஸ் இன் உருவாக்கம் இப்படம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து