முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பாதயாத்திரை செல்லும் பாதை ஓரங்களில் முட்செடிகளால் பக்தர்கள் அவதி

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- பழனி பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் பாதை ஓரங்களில் முட்செடிகளால் பாதயாத்திரை பக்தர்கள் அவதிப்பட்டு வருவதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திண்டுக்கல் முதல் பழனி வரை உள்ள பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக பல லட்சம் மதிப்பில் பழனி பாதாயத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இந்நடைபாதையில் திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், காரைக்குடி, பாண்டிச்சேரி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை வழிபட்டு ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். விரைவில் தைப்பூசம் நடைபெறுவதை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் தற்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் பாதயாத்திரையாக நடந்து செல்ல துவங்கியுள்ளனர். திண்டுக்கல் முதல் பழனி வரையுள்ள பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் பாதையில் ஒருசில இடங்களில் பேவர் பிளாக் கற்கள் உடைந்தும், ஆங்காங்கே முட்செடிககள் அதிகளவில் வளர்ந்தும், பாதாயத்திரை வரும் பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு பாட்டில்களை பாதயாத்திரை செல்லும் பாதையிலேயே உடைத்து செல்வதால் பாதாயத்திரையாக செல்லும் பக்தர்களின் கால்களில் காயம் ஏற்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து திண்டுக்கல் முதல் பழனி வரை உள்ள பாதையில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கற்கள், முட்செடிகளை அகற்ற வேண்டுமாய் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து