முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மூட்டு மாற்று முழு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை மருத்தவர்கள் சாதனை

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடுமாவட்டத்தில் ஈரோட்டிற்கு அடுத்த படியாக கோபிசெட்டிபாளையம் கோட்டத்தில் தான் அதிகளவு மக்கள் வசித்துவருகின்றனர். இங்கு செயல்படும் கோபி அரசு மருத்துவமனை 140 படுக்கை வசதிகளுடன் 26 மடருத்துவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு சத்தியமங்கலம் அந்தியூர் கடம்பூர் தாளவாடி நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கோபி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இருந்தாலும் நோயின் தீவிரத்தைப்பொறுத்து மேல்சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு நோயாளிகளை அனுப்பிவந்தனர். இதிலும் விபத்து மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது வழக்கம். இந்நிலையில் நம்பியூர் தாலுக்கா கெடாரை கிராமத்தைச்சேர்ந்த மணி என்பவர் தற்காலிக அஞ்சல் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்த

தால் இடுப்பு எலும்பு மூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முன்று மாதங்களாகியும் நடக்க இயலாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் அவரால் பணிக்கு செல்ல இயலவில்லை. இம்மாதம் இவர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்பு பந்து கிண்ண மூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூட்டு முற்றிலும் சிதைந்திருப்பதாகவும் அதற்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி கடந்த 14 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் இவருக்கு இடுப்பு பந்து கிண்ண முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதை தலைமை மருத்துவர் ஆனந்தன் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர்கள் பிரபாராம்குமார் முத்துராம் ஆகியோர் வெற்றிகரமாக முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அவர் சிகிச்சைக்குப்பிறகு உடல்நிலை மேம்பட்டு நன்றாக நடக்கத் தொடங்கியுள்ளார். மேலும் கோபி அரசு மருத்துவமனையில் முழு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் இனி வரும் காலங்களில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தலைமை மருத்துவர் ஆனந்தன் தெரிவித்தார். இதுவே தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு ஆகியிருக்கும் என்றும் அரசு மருத்துவமனை என்பதால் முழுவதும் இலவசமாக செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை தற்போது நல்லமுறையில் செயல்பட்டுவருவதாகவும் 140 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை 203 படுக்கைவசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்ந்த அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் அரசு மருத்துவ மனை நல்லமுறையில் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து