தமிழகத்தில் முதன் முறையாக ஆறுபடை முருகனுக்கு மஹா படிபூஜை விழா

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      வேலூர்
wj

தமிழகத்தில் முதன் முறையாக ஆறுபடை முருகனுக்கு மஹா படிபூஜை விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக், புளியங்கண்ணு கிளைகளில் உள்ள இரத்தினகிரி ஆறுபடைவீடு திருமுருக திருத்தொண்டர்கள் பேரவை சார்பில் ப்ரத்யங்கிரா முருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் ஆறுபடைக்கு மாலை அணிந்து விரதமிருந்து முருகபெருமானை தரிசிக்க ஆறுபடைக்கு சென்றனர்.

மஹா அபிஷகம்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்தினகிரி பாலமுருகனுக்கு மஹா அபிஷகம் நடைபெற்று இரவு 7மணியளவில் திருமுருகன் திருமண கூடத்தில் ஆறுபடை முருகனுக்கு தமிழகத்தில் முதன் முறையாக ப்ரத்யங்கிரா முருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் ஆறுபடை முருகனுக்கு மஹா படிபூஜை விழா நடைபெற்றது. விழாவில் சிவபெருமானின் புதல்வனான பாலமுருகனின் பக்திபாடல்களை பாடிகொண்டு 27 நட்சத்திரம் என்பதால் 27படிகள் செய்து அதில் தீபம்யெற்றி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதில் நவ்லாக், புளியங்கண்ணு, காரை, தெங்கால், ராணிப்பேட்டை, முத்துக்கடை, ஆற்காடு, வேப்பூர், விஷாரம், இரத்தினகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா படிப்பூஜை விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அனைவரும்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து முருகபெருமானுக்கு மாலை அணிந்திருந்த பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு முருகனை வழிபட ஆலயங்களுக்கு சென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து