முசிறியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      திருச்சி

முசிறி கைகாட்டியில் அதிமுக ஒன்றிய, நகரத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 30-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு முசிறி எம்எல்ஏ செல்வராசு தலைமை வகித்து எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மலர் தூவி அஞ்சலி

மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், அரசு வழக்கறிஞர் பாரதிராஜா, நகர துணை செயலாளர் விமல்ராஜ், ஜெ.பேரவை நகரசெயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து