கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை அப்புறபடுத்தி புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      கரூர்
pro karur

கருர் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு பிரதட்சிணம் சாலை,செங்குந்தபுரம், வடக்கு செங்குந்தபுரம்,முத்து நகர் ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிதிட்ட பணிகள்,சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதை நேற்று(26.12.2017) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்தஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது கருர் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் டெங்கு தடுப்பு பணிகள்,வளர்ச்சிதிட்டபணிகள்,சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதை மேலாய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போது சாக்கடைகள் தூர் வாரப்பட்டு அதன் கழிவுகள் உடனுக்குடன் அப்புறபடுத்தப்பட்டு பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது.கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை அப்புறபடுத்தி அதற்கு பதில் புதிய கட்டுமான பணிகள் மேற்கௌ;ளபட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாயில் உள்ள ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டு தடையின்றி கழிவு நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டு வருகிறது. என மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாச்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாச்சியர் அருள்,நகர் நல அலுவலர் மரு.ஆனந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து