முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் தொடுவானம் நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி : கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழூர்; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு நடைபெறுகிற பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேரில் பார்வையிட்டார்கள்.

நீட் தேர்வு பயிற்சி

தமிழக அரசின் அறிவிப்பின்படி, நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழக மாணவர்களை தயார் படுத்துகிற விதத்தில் தயார் படுத்துகிற வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நேற்று (26.12.2017) கீழப்பழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதுவரை 219 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

கிராமப்புறு மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வாய்ப்பினை பெறுமாறு மாவட்ட கலெக்டர் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். கலெக்டர் பேட்டி பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :-

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி, தமிழக மாணவர்களை அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும், திறன்தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஒன்றிய அளவில் தொடுவானம் பயிற்சி மையங்கள் மாநிலத்தில் 412 இடங்களில் அமைக்கும் பொருட்டு, அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் தொடுவானம் பயிற்சி (நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி) முதல் கட்டமாக 18.11.2017 அன்று உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் திறன் மிக்க முதுகலை ஆசிரியர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்டமாக கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் 09.12.2017 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரியலூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 672 மாணவ, மாணவியர்கள் நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு இணையதளத்தில் பதிவுசெய்துள்ளனர். மேலும், மூன்றாவது கட்டமாக இடையாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பளி, .பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்ட மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து