கழிவு நீர்த் தொட்டியினை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவித் தொகை : கலெக்டர் சு.கணேஷ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      புதுக்கோட்டை
pro p kottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் கழிவு நீர்த் தொட்டியினை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், நேற்று (26.12.2017) வழங்கினார்.

நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் சையத் அபுதாகீர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கழிவு நீர்த் தொட்டியினை (07.05.2005 ) அன்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்த வீரையா மற்றும் மன்னார்குடி ருக்மணி பாளையம் தெருவை சேர்ந்த செல்வம் ஆகியோர் சுத்தம் செய்யும் போது மரணமடைந்தனர்.

அதனடிப்படையில் இறந்தவர்களின் வாரிசுகளான வீரையா மனைவி ராணி மற்றும் செல்வம் மனைவி ஜெயலெட்சுமி ஆகியோருக்கு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 இலட்சம் என மொத்தம் ரூ.20 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, புதுக்கோட்டை சார் கலெக்டர் செல்வி.கெ.எம்.சரயு, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து