குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று வருகிறது கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தகவல்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர்  சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையில்  புதுடெல்லி கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வள ஆணையர் டாக்டர் பி. பால்பாண்டியன், மத்திய மின்துறை துணை இயக்குநர்  ஒ.பி.சுமன், மத்திய கப்பல்துறை அலுவலர்  பரமேஷ்வர் பாலி, மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் டாக்டர் கே. மனோகரன்,  ஆகியோர்களை கொண்ட மத்திய குழுவினர் 28.12.2017 அன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.  28-ம் தேதி காலை 11 மணியளவில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய ஆய்வு குழுவினர், முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே. சத்தியகோபால், முதன்மை செயலர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர்  மு.சாய்குமார்  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கே. கோபால்  வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி  மீன்வளத்துறை இயக்குநர்  வி.பி.தண்டபாணி  மாவட்ட ஆட்சித்தலைவர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர்  சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர்   சோ. இளங்கோ உட்பட உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரி கூட்டரங்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கின்றனர்.  மேலும், வள்ளவிளையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளையும், மருந்துகோட்டை, சுருளோடு, ஈசாந்திமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் சேதங்களையும், மின் சேதங்களையும், சாலை சேதங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். கொல்லங்கோட்டில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர், இக்குழுவினர்                        3 குழுக்களாக பிரிந்து 28.12.2017 மற்றும் 29.12.2017 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து