முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான ஜுனியர்களுக்கான பயிற்சி முகாமினை தேனி கலெக்டர் .வெங்கடாசலம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட எஸ்.ரெங்கநாதபுரம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நேற்று  முதவ்30.12.2017 வரை 4 தினங்களுக்கு நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜுனியர்களுக்கான பயிற்சி முகாமினை நேற்்று (27.12.2017) மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை போன்று தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர். அரசு வேலைக்கு செல்ல அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு ஏழ்மையின் காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை தொடர முடியாத சூழ்நிலையை தவிர்ப்பதற்காகவும், கல்வி சார்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு மாணவனுக்குத் தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதுபோன்ற தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்களின் பயனாக நமது மாவட்டம் மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 96.5 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 97.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 95.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 95.9 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
என்கடன் பணி செய்வதே இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் நோக்கமாகும். மனிதநேயம் பாரபட்சமின்மை, நடுநிலைமை, தனித்தன்மை, தன்னார்வதொண்டு, ஒருமைப்பாடு, உலகளாவிய தன்மை போன்ற கொள்கைகளைக் கொண்டு நானே என் சொந்த வாழ்க்கையில் முன்மாதிரியாக நடந்து காட்டுவேன் என்றும், சுகாதார விதிகளை அறிதல், மற்றவர்களுக்கு அறிவித்தல், பொதுநல வாழ்வை வளர்த்தல், தன்சுகாதாரத்தை போற்றுதல் போன்றவை இதன் செயல்முறைகளாகும்.  
   என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசம், தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி.அ.வசந்தி  மாவட்ட கல்வி அலுவலர்  செல்வம்  சேர்மன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, மரு.ஜெயச்சந்திரன்  தலைவர் வேல்டு விஷன் 2020   ்செந்தூரான்  பெரியகுளம், ஜூனியர் ரெட்கிராஸ்  சுருளிவேல்   ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து