மலைவாழ் மக்களுக்கு நகர்புற மக்களுக்கு இணையான அடிப்படை வசதிகளை மறைந்த முதல்வரின் ஜெயலலிதாவின் அரசு செய்து வருகிறது: அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், முன்னிலையுரையாற்றினார். திருப்பத்தூர் வட்டாட்சியர் ஸ்ரீராம் வரவேற்புரையாற்றினார்.

அமைச்சர் பேச்சு

இம்மனுநீதி நாள் முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாதம் தோறும் நடைப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. இதுபோன்று கிராமங்களில் பல கட்டங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களால் கிராம மக்களின் குறைகள் படிப்படியாக களையப்பட்டு கிராமம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது.

பொதுவாக மலையில் வசிப்பவர்களின் உறவுகள், வியாபாரம் முதலியன வசிக்கும் மலையினை சுற்றியே இருக்கும். ஆனால் ஏலகிரி மலையில் வசிக்கும் மக்களின் வளர்ச்சி ஏலகிரி மலையோடு நின்றுவிடாமல் போக்குவரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. குறிப்பாக 2001 ஆம் ஆண்டு மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் அவர்களை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து சென்னை மற்றும் பெங்களுர் மத்தியில் உள்ள சுற்றுலாத் தடமான ஏலகிரி மலையை பார்வையிட்டு ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கையினை மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் ஏற்று ரூ.14 கோடி ரூபாயை ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கினார். அந்நிதியில் இயற்கை பூங்கா, படகு இல்லம், நிலா வீடு, சாகச நிகழ்ச்சித் திடல் ஏற்படுத்தப்பட்டது. 2001-ற்கு பிறகு தான் எல்லா தெருக்களுக்கு சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், கிணறு வசதிகள் போன்ற வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று மலைவாழ் மக்களின் முக்கிய கோரிக்கையான சாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களுக்களின் குழந்தைகளின் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இச்சலுகைகளை பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகள் நன்கு தேர்ச்சி பெற்று கல்லூரியில் பயின்று உலக சாதனைகளை புரிய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இவ்விழாவில் வருவாய்த் துறையின் சார்பில் 38 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களும், 44 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 1 பயனாளிக்கு ரூ.20,000- நலிந்தோர் நிவாரணத் தொகையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றமும், 5 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான இந்திராகாந்தி விதவை உதவித் தொகையும், 9 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.1,82,500-ற்கான காசோலைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,20,000-ற்கான காசோலைகளையும், 6 பயனாளிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகை ரூ.36,000-ற்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி ரூ.16,000-ற்கான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 13 நபர்களுக்கு வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் செடிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1,12,000- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,600- மதிப்பில் சலவைப்பெட்டிகளையும், 42 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளையும் ஆக மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சத்தி 60 ஆயிரத்து 615- (ரூ.51,60,615-) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) கிருஷ்ணவேனி நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், ., மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத் துறை துணை கலெக்டர் பேபி இந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சிவகாமி, இணை இயக்குநர் வேளாண்மை(பொ) வாசுதேவரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, உதவி இயக்குநர் (நில அளவை) கண்ணபிரான், துணை இயக்குநர் (பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு) மரு.தேவபார்த்தசாரதி, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை) பிரேம்குமார், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து