முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் தை ப்பூசத் திருவிழா ஜன.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -பழனி முருகன் கோவிலில் தை ப்பூசத் திருவிழா ஜனவரி 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே முதன்மையானது தை ப்பூசத் திருவிழாவாகும். பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ற இத்திருவிழா வருகிற ஜன.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும். முன்னதாக 24ம் தேதி வாஸ்து சாந்தி ஞீஜை, அஸ்திரதேவர் உலா போன்ற நிகழ்ச்சி நடைபெறும். 25ம் தேதி அதிகாலையில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண மண்டபத்தில் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் கொடிக்கட்டு மண்டபத்தில் சுவாமி புதுச்சேரி சப்பரத்தில் எழுந்தருளி காலை 11 மணிக்குள் மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்றிரவு 7.30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவுலா காட்சி நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி காலை 8.45 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி 4 ரதவீதிகளில் திருவுலா காட்சி நடைபெறும். தினசரி இரவு 7.30 மணிக்கு மேல் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை, பெரிய தங்கமயில் வாகனம் ஆகியவற்றில் வீதியுலா நடைபெறும். 6ம் நாள் விழாவாக ஜனவரி 30ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றிரவு 9.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி _ தெய்வானை திருமணக் கோலத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி 4 ரதவீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ம் நாள் விழாவாக ஜன.31ம் தேதி புதன்கிழமை தை ப்பூசத் திருநாளாகும். அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி _ தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மீன லக்கினத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு திருத்தேரில் சுவாமி எழுந்தருளலும், தேரில் எழுந்தருளி தீபாராதனையும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். தேர் நிலை வந்து சேர்ந்தவுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். 10ம் நாள் விழா பிப்.3ம் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் தை ப்பூசம் நிறைவடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து