முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தாங்கி ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு கறவை பசுக்களை கலெக்டர் பொன்னையா வழங்கினார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் டிசம்பர் 2017 வரை 600 விலையில்லா கறவை பசுக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 550 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தாங்கி ஊராட்சியில் ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 50 கறவை பசுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த சீரிய திட்டங்களில் சிறப்பான திட்டம் தான் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டமாகும். வறுமையில் வாடிய ஏழை-எளிய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும். அவர்களுடைய அன்றாட தேவைகளை அவர்களே நிறைவேற்றி;க் கொள்ளும் வகையில் வாழ்வாதாரத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

பராமரிப்பு

இத்திட்டத்தினை பெற்ற ஏழை-எளிய மக்கள் இன்று தங்களுடைய அன்றாட செலவினங்களை மற்றவர்களை எதிர்பார்க்கமாமல் அவர்களே மேற்கொள்ள முடிகிறது, மேலும் அவர்கள் தம் பிள்ளைகளை கல்வி அறிவு பெறும் வயதில் வேறு வேலைக்கு அனுப்பாமல் படிக்க வைக்க முடிகிறது.

இத்திட்டத்தை அறிமுகபடுத்தியபோது ஒரு கறவை பசுவை பெற்றவர்கள் அதனை முறையாக பராமரித்து அப்பசுக்கள் ஈன்ற கன்றுகளும், கறவை பசுக்களாக வளர்ந்து மேலும் வருமானத்தை தருகின்றன. இதனால் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் மேலும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

எனவே, இத்திட்டத்தின் மூலம் கறவை பசுக்களை பெற்றுள்ள அனைவரும் அவற்றை முறையாக பராமரித்து பொருளாதாரத்தில் மேன்மை அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு.வை.ஜெயக்குமார், பாராளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டி.சாந்தகுமாரி, துணை இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் சி.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து