கன்னியாகுமரி அருகே ரூ.20 ஆயிரம் கோடியில் துறைமுக பணிகள் 2018ல் துவக்கம் துறைமுக அதிகாரி ஜெயகுமார் தகவல்

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே ரூ 20 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய துறைமுகம்2018 ல் துவக்கங்கப்படுவதாக  துத்துக்குடி துறைமுக அதிகாரி ஜெயகுமார் தெரிவித்தார்.

துறைமுக பணிகள்

கன்னியாகுமரி அருகே புதிய துறைமுகம்   அமைக்கப்படுகிறது. இதற்காக இடம் தேர்வு நடந்தது. துறைமுகம் அமைய கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்தாமரைகுளத்தில் துறைமுகம் அமைவது குறித்து செயல்விளக்க கூட்டம் தூத்துக்குடி  துறைமுக அதிகாரி ஜெயகுமார்   விளக்கம் தெரிவித்து பேசினார்.  அவர் பேசும் போது,  இந்த துறைமுகம் மத்திய சுற்றுசூழல்  அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே துறைமுகம் அமைக்கப்படும். அதன் பின்னர்  30 ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. இதனால் பொதுமக்கள் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லை. இந்தியாவிலேயே முதல்மு றையாக குடியிருப்பு பகுதிகளுக்கு இடையூறு இன்றி அமையப்படுகிறது. 2018 ல் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. இந்த திட்டம்  3 கட்டங்களாக அமைக்கப்படுகிறது.  துறைமுகம்  கடற்கரையில் இருந்து  கடலுக்குள்ளே இரண்டறை  கிலோமீட்டரும் கரையில் இருந்து 100 மீட்டர் வெளியேயும் அமையும்,  துறைமுகத்திற்காக 100 மீட்டர் அகலத்தில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இங்கு துறைமுகம் அமைந்தால் இலங்கை பெறும் 1500 கோடி லாபத்தை நாம் பெறமுடியும் . துறைமுகத்திற்கு தேவையான கற்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.  துறைமுகம் அமைய 19 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ. 6900 கோடி ஒதுக்கப்படுகிறது. துறைமுகம் அமையும் போது 500 நாட்டிக்கல் தூரம் பாதுகாப்பு வளையம்  அமைக்கப்படும்.  மேலும் ராடர் கருவிகள் பொருத்தப்படும்.  இதன் மூலம் காணாமல் போகும் மீணவர்களை மீட்பது எளிதாகும்.   தற்போது கொச்சியில் இருந்து தான் கப்பல்  வருகிறது. இனி இங்கிருந்தே இயக்க முடியும் என்றார். கூட்டத்தில் துறைமுக செயற்பொறியாளர் பெபின், கார்த்திகேயன். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித், வருவாய்அதிகாரி திவான் கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஸ் , சிவராகுல்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து