கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      கடலூர்
velingdan dam opened by cuddalure collector

தமிழக முதல்வர்  ஆணையின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து  2017-18ஆம் ஆண்டு பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர்  பிரசாந்த் மு.வடநேரே, ,  திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியின்போது கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, ,  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று மொத்தம் 24,059 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் நீர் இருப்பு, பருமழையை கருத்தில் கொண்டு 23 நாட்களுக்கு முதல் தண்ணீர் திறந்து விட  தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் பருவமழையை எதிர்நோக்கியும் அணையிலிருந்து 23 நாட்களுக்கு 250 கன அடி வீதமும், 24,059 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீர் திறப்பின் மூலம் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் வட்டங்களில் 62 கிராமங்கள் பயனடையும். விவசாயிகள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் எனவும், நீர் பங்கீடு செய்யவேண்டிய சூழ்நிலை வந்தால் அப்போது பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, ,  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.கணேஷ், பொதுப்பணித்துறை வெள்ளாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பி.பாலசுப்ரமணியன் (கடலூர்), வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் (விருத்தாச்சலம்), வெள்ளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எம்.சண்முகம் (விருத்தாச்சலம்), திட்டக்குடி வட்டாட்சியர் சிவகுமார், உதவி பொறியாளர்கள் பி.பாஸ்கரன், எஸ்.சோழராஜா, ஏ.வெங்கடேசன், எஸ்.உமா மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து