சிவகங்கை வட்டம் தமறாக்கியில் மக்கள் தொடர்பு முகாம்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      சிவகங்கை
28 siva news

சிவகங்கை.-சிவகங்கை வட்டம், தமறாக்கியில் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்; மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு,  மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையுரையில் தெரிவித்ததாவது,
குடும்ப அட்டை தொடர்பான குறைகளை களையும் நோக்கத்துடன் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் அரசினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் உங்களின் நேரம் மற்றும் பயணச் செலவு தவிர்க்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அலுவலர்கள் நேரில் வந்து உங்கள் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்கிறார்கள். நமது ஊரில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பேருந்து வசதி, சாலை வசதி வேண்டி மனுக்கள் அளித்துள்ளீர்கள். அதற்குரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும் என்றும், இன்றையதினம் 40 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், முன்னர் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 16 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை மற்றும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமானால் படிப்பு மற்றும் நன்னடத்தை மிகவும் அவசியம் எனக் கூறினார்.
இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து