தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: காயம் காரணமாக முதல் டெஸ்டில் தவான் விளையாடுவது சந்தேகம்

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      விளையாட்டு
dawan 2017 11 19

கேப்டவுன்: இந்திய தொடக்க வீரர் ஷிகார் தவானுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

கணுக்காலில் காயம்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது. செவ்வாயன்று இந்திய அணி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு ஓட்டலுக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் இடது காலில் கட்டு போட்டபடி வந்தார். அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

விளையாடுவது சந்தேகம்
இதையடுத்து பிசியோ தெரபி பெட்ரிக் பர்கத், தவானின் காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்தார். அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் செய்யப்படுகிறது. இதனால் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம். முதல் போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால் முரளிவிஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்.


இதுபற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவானின் காயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பிசியோ தெரபி இதுவரை எந்த அறிக்கையையும் தேர்வுக் குழுவுக்கு தரவில்லை. தற்போது அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் முதல் டெஸ்டில் தவான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து