முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்.

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

குஜிலியம்பாறை - குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலி கிராமத்தில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலை மற்றும் இந்தின் பீரோ ஆப் மைன்ஸ் இணைந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்கள் செட்டிநாடு சுரங்கங்களில் 16-12-2017 முதல் 31-12-2017 இன்று வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் ஆலையின் இணைத்தலைவர் ஆ.ரு.சுப்பிரமணியன் மற்றும் சுரங்கங்களின் உபதலைவர் மு.ரகுநாத்சிங் ஆகியோர் தலைமையில் செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான ஆலம்பாடி, மல்லப்புரம், கரிக்காலி, தோளிப்பட்டி மற்றும் தேவர்மலையில் உள்ள சுரங்கங்களில் நடைப்பெற்றது. அதுசமயம் ஒவ்வொறு சுரங்கப்பகுதிகளிலும் சுமார் 200 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுரங்க அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களால், சுரங்கத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு தனி மனித ஒழுக்கம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. இதில் சுரங்கத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கரிகாலி செட்டிநாடு சிமெண்ட் நிர்வாகம் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, கோவில்கள் கட்டி தருதல் போன்ற பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து