முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிப்பட்டி -ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கதலிநரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான கோவிலில் நரசிங்கபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியான இன்று கோவிலில் காலை 10.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்து சாமிதரிதனம் செய்தனர். சக்கரத்தாழ்வாருக்கு விமோசனம் கொடுத்த கதலிநரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக கொண்டு வரப்பட்டார். பெருமாளுக்கு பக்தர்கள் முன்னிலையில் தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது கோவில் சொர்க்க வாசல் முன்பாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் வழியாக வந்த உற்சவருக்கு டி.ராஜகோபாலன்பட்டி கிராம மக்கள் சார்பில் மண்டகபடி செய்யப்பட்டது. வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கதலி நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு துளிசிமாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு துளசி இலை தீர்த்தம் வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை செயலர், தக்கார், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து