ஜன.5ல் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      விளையாட்டு
Faf du Plessis 2017 12 29

இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் கேப்டன் டுபிளெசிஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வலுவான அணிக்குத் திரும்பியுள்ளனர்.

கேப்டவுனிற்கு வரும் தென் ஆப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் இடம்பெற்றுள்ளார். காயமடைந்த குவிண்டன் டி காக் இந்திய டெஸ்ட் போட்டிக்குள் குணமடைந்து விடுவார் என்றபடியால் அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேகிஸோ ரபாடா, மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர், டேல் ஸ்டெய்ன் ஆகிய அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:
டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியூனிஸ் டி புருய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், ஐடன் மர்க்கரம், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், ரபாடா, டேல் ஸ்டெய்ன்


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து