2017 க்ளோப் ஸாக்கர் விருதுகள்: சிறந்த வீரராக ரொனால்டோ மீண்டும் தேர்வு

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      விளையாட்டு
Ronaldo 2017 12 29

2017-ம் ஆண்டுக்கான க்ளோப் ஸாக்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மார் ஆகியோரைக் கடந்து பொர்ச்சுகல் நாட்டின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில், கிளப் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் பல விருதுகளைத் தட்டிச் சென்றது. அந்த அணியே 2017 க்ளோப் ஸாக்கர் சிறந்த அணிக்கான விருதை தட்டிச் சென்றது.

அந்த அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பயிற்சியாளர் விருதும் ரியல் மாட்ரிட் அணியின் ஸினேடின் ஸிடானுக்கு வழங்கப்பட்டது. 2017-ல் உலகளவில் சிறந்த லீக் தொடருக்கான விருது லாலிகா பெற்றது. பார்சிலோனாவைச் சேர்ந்த முன்னாள் தடுப்பாட்ட வீரர் கார்லஸ் பியோல் மற்றும் டாட்டி கிளப் ஆப் ரோமா அணியின் ப்ரான்ஸிஸ்கோ ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து