மக்களுக்காக நல்ல படங்களுக்கு நடிக்க காத்திருக்கிறேன் அறிமுக நாயகி நைனானிகா

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      சினிமா
Nainanika

மக்களுக்காக நல்ல படங்களுக்கு நடிக்க காத்திருக்கிறேன் என்று புதுமுக நடிகை நைனாகிகா கூறினார்.

நான் கேரளா மாநிலம் பாலக்காட்டில் வசித்து வருகிறேன். அங்கு பள்ளியில் பன்னிரண்டு வகுப்பு படித்து வருகிறேன். பதுங்கி இருக்கனும் தல படத்தில் தமிழ் திரையுகலில்  நான் அறிமுககின்றேன். பதுங்கி இருக்கனும் தல படம் எனக்கு முதல் படமாகும். இந்த படத்தில் நடிக்க நான் ஆடிசனுக்கு போய் இருந்தேன் அங்கு 150 க்கும் மேற்பட்ட நடிகைகள் வாய்ப்புக் காக காத்து இருந்தனர். இயக்குனருக்கு தேவையான தமிழ் மற்றும் கேரளா முகம் பாவனை தேவைப்பட்டது. நான் அப்படி இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த படத்தில் என்னுடன் நடித்த மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் நான் புது முகம் சொல்லாத அளவுக்கு என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள் நான் எப்படி நடிக்க வேண்டும் என்று அறிவுரைகளை சொன்னார்கள் .இந்த படம் படப்பிடிப்பில் நான் செம ஜாலியாக இருந்தேன்.

இயக்குனர் பற்றி சொன்னால் அவர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் உதவியாளராக இருந்தவர். எஸ்.ஏ.சி.சார்.எப்படி கடுமையான உழைப்பாளியே அதே போல் தான் இந்த படம் இயக்குனர் .அவர் எனக்கு நடிக்க  கற்று கொடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் தொடர்ந்து கிராமத்தில் வசிக்கும் பெண்னாக நடிக்க விரும்பிகிறேன். இந்த படத்தில் நாயகன் அவர் நடன கலைஞ்ர் ஆவார். எனக்கு நடிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்த படத்தில் டூயட் பாடல் கூட மைக்கேல் நன்றாக சொல்லி கொடுத்துள்ளார். எனக்கு இளையதளபதி விஜய் சாரின் தீவிர ரசிகன் ஆவேன். அதே நயன்தாரா மேம் மிகவும் பிடிக்கும் அவரின் அனைத்து படங்களும் ரொம்ப பிடிக்கும் . எனக்கு சிறு வயது இருந்தே சினிமாவில் நடிக்க ஆசை இருந்தேன் .அந்த ஆசை இப்பொழுது நடந்து இருக்கிறது.இந்த படத்தின் மூலம் எனக்கு அறிமுக செய்து வைத்த இயக்குனருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் நடிக்க இருக்கும் படங்களுக்கு மக்களுக்கு பிடித்த போல் நடிக்க விரும்புகிறேன். எனது கனவு சிறந்த நாயகியாக வருவது எனது நோக்கமாகும்.அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்


இவ்வாறு நைனானிகா கூறுனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து