தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      சினிமா
janini iyyer

Source: provided

சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகி இருக்கும் `பலூன்' படத்தில் நடித்தது குறித்து கூறிய ஜனனி ஐயர், இந்த படம் மூலம் தமிழில் முக்கிய இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  

'70 எம் எம்' மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் `பலூன்'. சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் 29-ஆம் தேதி வெளியான்து.  

இந்த படத்தில் நடித்தது பற்றி ஜனனி அய்யர் கூறும்போது,   “ ‘பலூன்’ படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில் நான் நடித்திருக்கிறேன். இதில் அந்த காலத்து பெண் போல ஆடை அணிந்து நடிக்கிறேன். நடை, உடை, பாவனைகளிலும் அதை பிரதிபலித்திருக்கிறேன்.


நான் தமிழ் பெண் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.    இந்த படத்துக்கு பிறகு தமிழில் நான் முக்கியமான இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காகவே இதில் எனது பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறேன்.

இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து