ஜுனியர் என்.டி.ஆர்., ஹன்சிகா நடிக்கும் " போக்கிரி பையன்"

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      சினிமா
Junior NTR  Hansika

Source: provided

தெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக வலம் வருபவர் ஜுனியர் என்.டி.ஆர். இவர் அதிரடி ஆக்க்ஷன் கதாநாயாகனாக நடித்த படம் "கன்த்திரி" இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோட்வானி, இந்தி நடிகை கஜோல் தங்கை தனிஷா முக்கஜி  மற்றும் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, சயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ளனர்.

இசை: மணிசர்மா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ். தெலுங்கில் நூறு நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடிய இப்படம் "போக்கிரி பையன்" எனும் பெயரில தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும் இது தான் போக்கிரி பையன் படத்தின் மையக்கரு என்கிறார் இயக்குனர். ஊரில் யார் என்ன உதவி கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுக்கும் குடும்பம். இக்குடும்பத்தின் வீட்டு வேலைக்காக வருகிறான் ஒருவன். அவனால் செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம், மோசடியால் குடும்பம்  அவமானப்படுத்தப்பட்டு நடுத்தெருவுக்கு வருகிறது.

துரோகத்தை முறியடித்து மோசடியால் இழந்த சொத்தை மீட்டு எடுக்கும் விறுவிறுப்பான திரைக்கதையில்கதாநாயகனாக ஜுனியர் என்.டி.ஆர். நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் ஓம் ஸ்ரீமுனிஸ்வரர் மூவீஸ் வழங்க தமிழகமெங்கும் வெளியிடும் விநியோக உரிமையை சஞ்சீவி ராமன் வாங்கியுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு போட்டியில் போக்கிரி பையன் களமிறங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து