கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மன் சாதனையை சமன் செய்தார் ஸ்மித்

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      விளையாட்டு
steve-smith 2017 12 30

மெல்போர்ன் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பிராட்மன் சாதனையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சமன் செய்துள்ளார்.

போட்டி டிரா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் ஆஸ்திரலிய அணி தொடரை வென்று விட்டது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது.  இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்  76 ரன்கள் எடுத்த ஸ்மித், 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடி  சதம் அடித்தார். அவர் 275 பந்துகளில்  6 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார்.


சமன் செய்தார்

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மெல்போர்ன் டெஸ்டில் நான்கு சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டான் பிராட்மேன் உடன் பகிர்ந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இதற்கு முன் டான் பிராட்மேன் 1928 முதல் 1931 வரை 112, 123, 152 மற்றும் 167 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 192, 134*, 165* மற்றும் 102* ரன்கள் அடித்து டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் நேற்றைய சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள் விளாசியுள்ளார்.

2-வது இடம்

அத்துடன் விரைவாக 23 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். டான் பிராட்மேன் 59 இன்னிங்சில் 23 சதங்களும், சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 102 இன்னிங்சில் 23 சதமும், மொகமது யூசுப் 122 இன்னிங்சில் 23 சதங்களும், சச்சின் தெண்டுல்கர் 123 இன்னிங்சில் 23 சதங்களும் விளாசியுள்ளனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து