புதுவையில் மாற்றம் வரும் என கூற இவர் ஆளுனரா? இல்லை சமூக ஆர்வலரா?முதல்வர் நாராயனசாமி ஆவேச பேட்டி

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      புதுச்சேரி

நியமன எம்.எல்.ஏ வழக்கு நிலுவையில் உள்ள போது இது சம்பந்தமாக கோர்ட்டு தான் முடிவு செய்ய வேன்டும். ஆனால் துரதிஷ்டவசமாக கவர்னர் கிரன்பேடியின் கருத்து புதுவை அரசுக்கு எதிராகவும், முட்டுக்கட்டை போடும் வகையில் உள்ளது.

நியமன எம்.எல்.ஏ வழக்கு

யூனியன் பிரதேச சட்டம் குறித்து கவர்னர் கிரன்பேடிக்கு இதுவரை 15 கடிதங்கல் அனுப்பி உள்ளேன். இருப்பினும் கவர்னர் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுகிறார்.புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கவர்னர் கிரன்பேடி காவல்துறை கூட்டத்தை நேற்று கூட்டி உள்ளார். இவர் போட்டி அரசு நடத்துகிறாரா? இது சம்பந்தமாக நான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.புதுவை கவர்னர் கிரன்பேடி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக்கூடாது என விதி உள்ளது. ஆனால் கிரன்பேடி அதனை மீறி செயல்படுகிறார். மேலும் உள்துறை அமைச்சகம் கூறிய பிறகும் விதிமுறைகளை மீறி உள்ளார்.இவர் கவர்னரா? எதிர்க்கட்சி தலைவரா? அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டுவராமல் அதிகாரிகளுக்கு உத்தரவிட இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வரும். 2018-ல் அதிகார மாற்றம் வரும் என கிரன்பேடி கூறியுள்ளார். அவர் என்ன மாநில நிவாகியா? அல்லது சமூக ஆர்வலரா?காரைகால் மீனவர்கள் 10 பேர் 4 மாதத்துக்கு முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளர். மீனர்வர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தி உள்ளேன்.புதுவையில் வரி ஏய்ப்பு நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. பில் போடாமல் தில்லு முல்லு நடக்கிறது. அனைத்து வியாபாரிகளும் வாங்கும் பொருட்களுக்கு பில் போட வேண்டும் அல்லது அவ்வாறு பில் போடாமல் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மூடப்படும்? அல்லது லைசென்சு ரத்து செய்யப்படும்.புதுவையில் மீன்பிடி தடை நிவாரணமாக ரூ.4.94 கோடி நிதி மீனவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். உடன் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ, துனை சபாநாயகர் சிவகொழுந்து உடனிருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து