முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் வார்டுகளை மறுவரையறைகள் மேற்கொண்டது தொடர்பான ஆலோசனை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தலைமையில், ஊரக மற்றும் நகர்புற வார்டுகளை, வரைவு மறுவரையறைகள் மேற்கொண்டது தொடர்பாக,  அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்  நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தெரிவித்ததாவது:-     

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு மறுவரையறை ஆணையம், உறுப்பினர் செயலர், சென்னை அவர்களின் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட ஊராட்சி வார்டுகள்,    111 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 984 கிராம ஊராட்சி வார்டுகள், 897 பேரூராட்சி வார்டுகள் மற்றும் 118 நகராட்சி வார்டுகளுக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.  மேலும், வார்டு மறுவரையறையானது, மறுவரையறை அதிகார அலுவலராகிய ஊராட்சி வார்டுகளுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும்  ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு மறுவரையறை அதிகார அலுவலராகிய உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு மறுவரையறை அதிகார அலுவலராகிய செயலர், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளுக்கு தொடர்புடைய பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சிகளின் வார்டுகளுக்கு தொடர்புடைய நகராட்சிகளின் ஆணையாளர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. வரைவு மறுவரையறை கருத்துருவானது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பார்வைக்காக 27.12.2017 அன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்திலும்,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும், உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்திலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய பேரூராட்சிகள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளதுஇக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தயார் செய்யப்பட்ட வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் மீது, அவர்களது கருத்துருக்களை தெரிவித்தனர்.  மேலும், வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்களை படித்து பார்த்து, ஆட்சேபணைகளை தெரிவிக்க, மறுவரையறை ஆணையத்திடமிருந்து கூடுதல் கால அவகாசம் பெற்றுதர வேண்டும் என கோரிக்க வைத்தார்கள்.  மேலும், கால அவகாசம் குறித்து, உறுப்பினர், செயலர்,  மாநில மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக கருத்துரு அனுப்பி வைக்கப்படும் எனவும், தங்களது கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) டாக்டர். சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்  கோமதிநாயகம் (வளர்ச்சி),                                            தாமுவேல் பெரியநாயகம்  (தேர்தல்), உதவி இயக்குநர்கள்  சையத் சுலைமான் (ஊராட்சி),  மாடசாமி சுந்தர்ராஜ் (பேரூராட்சிகள்), அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து