நெல்லையில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில்  நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா நடத்திட தேவையான முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும். புத்தகத் திருவிழா பிப்ரவரி மாதம் நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதி போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு அதிக அளவிலான மக்கள் வருகை தரும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு தினசரி கலைநிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும். புத்தகம் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், இளைஞர்கள் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் சிறப்பாக நடத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனப் பேசினார்.இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்ச்சி இளம்பகவத், முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணநாயர், தேசிய புத்தக நிலையம் திட்ட அலுவலர் மதன்ராஜ், மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர், மாவட்ட நூலக அலுவலர் ரமேஷ்ராஜா, திருநெல்வேலி நூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து