இந்தியாவிலேயே எச்.ஜ.வி. தொற்று இல்லாத மாநிலம் புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ராமன் பெருமிதம்

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      புதுச்சேரி

புதுவை நலவழித்துறை இயக்குனர் ராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வர் கூறியதாவது:

பேட்டி

 மத்திய அரசு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலமாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எச்.ஜ.வி. கணக்கெடுப்பு நாடு முழுவதும்நடத்துகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு 2 பிரிவுகளில் சமிபத்தில்நடத்தப்பட்டது. புதுவையில் 800 கர்ப்பிணிகளுக்கு எச்ஜ.வி. பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் எச்ஜவி தொற்று இல்லை என்பதன்அடிப்படைடயில் மத்திய அரசு புதுவை மாநிலத்தை பூஜ்யம் தொற்று உள்ள மாநிலமாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் புதுவை முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சராசரி எச்ஜவி தொற்று கர்ப்பிணி பெண்கள் மத்தியில் 0.28 சதவீதமாகும். ஆனால் 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது புதுவை 10-வது இடத்தை பிடித்திருந்தது. இதே போல எ;ச்ஜவி தொற்று உயர் ஆபத்து குழுவை சேர்ந்;த 500 ஓரின சேர்க்கையாளர்கள் மத்தியிலும் 750 பெண் பாலியல் தொழிலாளர்கள் மத்தியிலும் எச்ஜவி சோதனை செய்யப்பட்டது. அதில் ஓரின சேர்க்கையாளர் மத்தியில் எச்ஜவி தொற்று மிக குறைந்த விகிதமாக 0.2 என்ற அளவில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் சராசரி விகிதம் 2.69 ஆக உள்ளது. கடந்த 20121ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது இதே பிரிவில் புதுவை 4-வது இடத்தை பிடித்திருந்தது. மேலும் பெண் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்ஜவி தொற்று கண்டறியப்பட்டு 0.27 என்ற அளவில் இந்தியாவிலேயே 8-வது இடத்தில் உள்ளது. தற்போது இப்பிரிவில்சராசரி விகிதம் 1.56 ஆக உள்ளது. கடந்த 2011 ஆண்டு  பெண் பாலியல் தொழிலாளர்கள் பிரிவில் புதுவை 16-வது இடத்தை பிடித்திருந்தது. புதுவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எசஜவி முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அதில் எச்ஜவி தொற்று இருந்தால் உறுதி படுத்துவதற்காக மேலும் 2 பரிசோனைகள் செய்வதற்கு புதுவையில் 4 பிராந்தியங்களிலும் 12 நிர்ணயிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. எச்ஜவி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கதிர்காமம்அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் உள்ள ஏஆர்டி மையங்களில் இலவசமாக மாதம் ஒருமுறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுவை மாநிலத்தில் 615 பேரும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 569 பேரும் இலவச சிகிச்சை பெறுகின்றனர். புதுவை அரசு 540 எச்ஜவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத உதவித் தொகையாக 9 முதல் 59 வரை ரூ.1500-ம் 60 முதல் 79 வயது வரை ரூ.2 ஆயிரமும், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அதிகாரி ஜெயந்தி உடனிருந்தார்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து