முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. - இங்கிலாந்து இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் டிரா ஆனது

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான4-வது ஆஷஸ் டெஸ்ட் டிரா ஆனது. ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்தார்.

சுற்று பயணம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் வார்னர் மட்டும் சதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இரட்டை சதம்

அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி, இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு ஐந்தாவது இரட்டை சதம். அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மற்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்  இருந்தனர். அவர் 244 ரன் எடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 491 ரன்கள் எடுத்தது.

ஸ்டீவ் ஸ்மித் சதம்

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. பேன்கிராப்ட் 27 ரன்களும் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வார்னர் 86 ரன்களிலும் ஷான் மார்ஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். இது அவருக்கு 23 வது டெஸ்ட் சதம். நடப்பு ஆஷஸ் தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இது. பின்னர் ஆஸ்திரேலிய 4 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்த நிலையில்  போட்டி டிரா  ஆனது.  ஸ்மித் 102 ரன்களுடனும் மிட்செல் மார்ஷ் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து