கழிப்பறை அமைக்கும் பணியை நடிகை திரிஷா தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      சினிமா
Trisha 2017-12 31

Source: provided

திருப்போரூர் :  திருப்போரூர் அருகே ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கழிப்பறை அமைக்கும் பணியை திரைப்பட நடிகையும் யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதருமான திரிஷா  தொடங்கி வைத்தார்.

திருப்போரூர் அருகே வடநெம்மேலி ஊராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடக்க விழாவுக்கு யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் திரிஷா அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி நடிகை திரிஷா பங்கேற்று கழிப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்  பொன்னையா தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மேலும் சில வீடுகளிலும் இந்த கழிப்பறைத் திட்டத்தை தொடங்கி வைத்த திரிஷாவை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து