கென்யாவில் பஸ் விபத்து: 30 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      உலகம்
kenya-accident 2017 12 31

நகுரு-எல்டோரெட் : மத்திய கென்யாவில் பேருந்தும், லாரியும் நேற்று காலை நேருக்கு நேர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டதில் 30 பேர் பலியாகியதோடு 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நகுரு நகர் அருகில் நகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலையில் று அதிகாலை 3 மணியளவில் புசியாவிலிருந்து சென்று கொண்டிருந்த பேருந்து நகுருவிலிருந்து வந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர், பேருந்து நொறுங்கியது, அதிலிருந்து 30 உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த நெடுஞ்சாலியில் இந்த மாதத்தில் மட்டும் நடந்த விபத்துகளில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர், பலியானவர்களில் 3 வயது குழந்தையும் அடங்கும்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நபர் விபத்து பற்றி கூறும்போது, “நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது மிகப்பெரிய சப்தம் கேட்டது, உடனே நாலாப்பக்கமும் அழுகையும் ஓலமும் வெடித்தது. நான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன் என் கால்கள் இடிபாடுகளில் சிக்கியது, மீட்கப்பட்டேன். பல உடல்கள் தாறுமாறாக சேதமடைந்ததைக் கண்ணால் பார்த்தபோது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டது” என்றார். கென்யாவில் ஆண்டுக்கு 3,000 பேர் சாலை விபத்துகளி பலியாவதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து