சென்னையில் 3-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
admk Talaimaikkalakam 2017-12 31

Source: provided

சென்னை :  அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 3-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், ஜனவரி 8-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜனவரி 3-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.


எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தினகரன் தரப்பினரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்க உள்ளனர். கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து