அ.தி.மு.கவை வெல்ல யாரும் பிறந்ததில்லை : இனி பிறக்கப் போவதும் இல்லை: முதல்வர் எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
edapadi cm 2017 09 30

Source: provided

கரூர் :  அ.தி.மு.கவை வெல்ல யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தைத் தெரிவித்தார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததையடுத்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:

“ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்ற முழுவிவரம் எனக்குத் தெரியவில்லை. அவரது பேச்சைக் கேட்ட பிறகே கருத்து கூற முடியும்” என்றார்.


சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, “இது அவரது தனிப்பட்ட கருத்து. இப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய அ.தி.மு.க இப்போதும் உயிரோட்டமாக இருக்கிறது. அ.தி.மு.கவை வெல்ல யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப்போவதுமில்லை” என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பிறகு திண்டுக்கல் சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டார். விழா மேடையில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை அவர் திறந்து வைத்தார். முன்னதாக, எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து