முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி நிலைப்பாட்டை மீறி முத்தலாக் மசோதாவுக்கு முலாயம் மருமகள் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும். முஸ்லிம் பெண்களின் நீண்டகால கோரிக்கைக்கு இது தீர்வாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து