ரஜினி அரசியல் வருகை : மு.க. ஸ்டாலின் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
mkstalin 2017 12 31

Source: provided

சென்னை :  ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ, பாதகமோ கிடையாது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ, பாதகமோ கிடையாது                            - மு.க.ஸ்டாலின்

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, 'வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்' என்று அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ, பாதகமோ கிடையாது'' என்று தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து