மும்பையில் 314 ஓட்டல்கள் இடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      இந்தியா
Mumbai 2017 12 31

Source: provided

மும்பை :  மும்பையில் கமலா மில் வளாகத்தில் மாலில் அமைந்துள்ள ஓட்டலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முறைப்படி அனுமதி பெறாமல் செயல்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை மாநகராட்சி  முடிவு செய்தது. இதற்காக 24 வார்டுகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர். 600க்கும் மேற்பட்ட  ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் 314 ஓட்டல்கள் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டமானங்களை அமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டல்களை இடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி புல்டோசர் மூலம் உடனடியாக ஓட்டல்களை இடிக்கும் பணி நடந்தது. மேலும் 7 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

திடீரென ஒட்டுமொத்தமாக ஓட்டல்களை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கு ஓட்டல் நிர்வாக சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் தலைவர் சந்தோஷ் கூறுகையில், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அனைத்து ஓட்டல்களையும் தண்டிப்பது நியாயமற்றது என்று கூறினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து