முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆண்டுகளுக்கு பின்பு 10-ம் வகுப்பு மாணவர்களின் சங்கம விழா

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தேனி

போடி, - தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் சங்கம விழா அப்போதைய தலைமையாசிரியரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
 போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1977-1978-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்களது குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து கொண்டாடும் சங்கம விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. போடி - மூணார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரீன் ராயல் ஹோட்டலில் அப்போதைய தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், ஆசிரியர்கள் அய்யாவு, ராமராஜ், அங்கயற்கண்ணி, சவீதா (எ) காமாட்சியம்மாள், காந்திமதி, காந்தி, அழகர்சாமி, தியாகராஜன் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. விழா குழு தலைவர் அய்யப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ரமேஷ் கலந்து கொண்டார். இவ்விழாவில் கடந்த 1977-78-ம் ஆண்டு பயின்ற மாணவ-மாணவியர்கள் 63 நபர்கள் தங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
 தங்களது 10-ம் வகுப்பு பயின்று விட்டு பின்னர் தங்களது மேற்படிப்பிற்காகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் காவல்துறை, வேளாண்மை துறை, வருவாய்துறை, ஆசிரியர்கள் போன்ற அரசு பணிகளிலும், சிலர் சொந்த நிலங்களில் விவசாயம் பார்த்து வந்தனர். பெரும்பாலும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் பல ஆண்டு காலம் கடந்து விட்ட நிலையில் ஒருசிலர் சக மாணவ-மாணவிய நண்பர்களை ஒன்று சேர்த்து விழா நடத்த வேண்டும் என்று விரும்பம் தெரிவித்தனர்.
 இதன் பேரில், விழா குழு ஒன்று அமைக்கப்பட்டு காவல்துறையில் பணியாற்றும் அய்யப்பன் குழு தலைவராகவும், ஒருங்கிணைப்பாளர்களாக வேல்ராணி, ரமேஷ், ஞானசேகரன், மணிவாசகன், ராஜேந்திரன், பாலமுருகன், நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விழாவிற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
 இவ்விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டது. இதில் உடன் பயின்ற சக மாணவர்களில் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் முருகேசன் நன்றி தெரிவித்தார். விழா நிறைவில் விருந்து வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து