ஆஷஸ் 4-வது டெஸ்ட்டில் இரட்டை சதம்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறினார் 'குக்'

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      விளையாட்டு
cook 2017 12 31

துபாய் : இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் டபுள் செஞ்சூரி அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

4-வது டெஸ்ட் டிரா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மேல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் அவுட்டாகாமல் 244 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 17-வது இடத்தில் இருந்த அவர் 9 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

புஜாராவுக்கு 2-வது....

ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், விராட் கோலி, புஜாரா, கேன் வில்லியம்ஸ் ஆகியோர் முறையே 2-வது இடம் முதல் 4-வது இடத்தை பிடித்துள்ளனர். ஜோ ரூட் ஒரு இடங்கள் முன்னேறி கேன் வில்லியம்சன் உடன் 4-வது இடத்தை பகி்ர்ந்துள்ளார்.

ஆண்டர்சன் முதல் ...

டேவிட் வார்னர் 6-வது இடத்திலும், ஹசிம் அம்லா 7-வது இடத்திலும் உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் அசார் அலி 9-வது இடத்திலும், இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 10-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் முதல் இடத்தையும், தென்ஆப்பிரிக்கா வீரர் காகிசோ ரபாடா 2-வது இடத்தையும், ஜடேஜா 3-வது இடத்தையும், அஸ்வின் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து