யானைகள் நலவாழ்வு முகாம் கோவையில் 4ம் தேதி துவக்கம்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தமிழகம்
elephant camp(N)

கோவை, கோவை அருகே இருக்கும் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் வருகிற 4ம் தேதி துவங்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான புத்துணர்வு முகாம் கோவையில் வருகிற 4ம் தேதி துவங்குகிறது. தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்பட இருக்கிறது.

பிப்ரவரி 20ம் தேதி வரை மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமில் மொத்தம் 34 யானைகள் பங்கேற்கின்றன. முகாமில் தங்க வைக்கப்படும் யானைகளுக்கு கால்நடை அலுவலர்கள், டாக்டர்கள் நேரடி பார்வையில் சிகிச்சைகள், உடல் எடை பராமரிப்பு, மருத்துவ மூலிகை உணவு வழங்கல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் இருந்து யானைகள் 2ம் தேதி மாலை முதல் அழைத்து செல்லப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சங்கரன்கோவில் சங்கர நராயாண சாமி கோவில் யானை கோமதி, இலஞ்சி வள்ளி, திருங்குடி ஜீயர் மடத்தில் உள்ள வள்ளி, சுந்தரவள்ளி யானை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி ஆதி நாதர் கோயில் யானை ஆதிவள்ளி, இரட்டை திருப்பதி லட்சுமி, குமுதவல்லி, திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை ஆகியவை பங்கேற்கின்றன.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து