60 ம் ஆண்டு சாதனையாக 2018ல் சூரியனைத் தொட துடிக்கும் நாசா

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      உலகம்
nasa 2018 01 01

வாஷிங்டன்,  2018ல் 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாசா இந்த ஆண்டுக்கான இலக்காக சூரியனை தொட்டுவிட வேண்டும் என்று டார்கெட் வைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது நாசா. துள்ளியமான கணிப்புகள், விண்வெளியில் மற்ற நாடுகள் செய்யத் தயங்கும் விஷயங்களை கூட முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்பது நாசா ஆராய்ச்சியாளர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆண்டில் என்ன செய்யப்போகிறோம் என்ற அறிவிப்புகளை நாசா வெளியிட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு நாசா வைத்திருக்கும் டார்கெட் சூரியனை தொட்டு விட வேண்டும் என்பது தான். சூரியனை ஆராய்ச்சி செய்யப்போகும் நாசா விண்வெளியில் இதுவரை உலக நாடுகள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு விஷயத்தை நாசா டார்கெட்டாக வைத்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற செயற்கைக்கோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

என்ன செய்யப்போகிறது சோலார் ப்ரோப்?


 இந்த சோலார் ப்ரோப்பானது அதீத வெப்பம் மற்றும் சோலார் ரேடியேஷன் குறித்து ஆராயும் என்றும் நாசா கூறியுள்ளது. சூரியனின் மேலடுக்கு வெப்பநிலை 10000 °F. அதே வேளையில் அதன் வளிமண்டலம் அதை விட மூன்று மடங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.இதே போன்று நாசா செவ்வாய் கிரகத்தின் உட்புற ஆய்வு மற்றும் வெளிப்புற தோற்றத்தை தொடர்ந்து ஆராய திட்டம் வைத்துள்ளது. தற்போது இருக்கும் ரோபோடிக்கின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் நாசா திட்டம் வைத்துள்ளது. 2018 மிஷன்கள் பூலோகத்தில் ஐஸ் ஷீட்கள் எப்படி உருவாகின்றன, கடல் நீர் மட்டம் மற்றும் நிலத்தடி நீர் மாற்றங்கள், உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும் நாசா, இதை தொடர்வதற்காக ICESat -2 மற்றும் GRACE ஃபாலோ ஆன் என்ற இரண்டு மிஷன்களை செலுத்தவும் நாசா திட்டம் வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து