நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மற்றும் எட்டுக்குடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் : கலெக்டர் சுரேஷ்குமார் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      நாகப்பட்டினம்
Nagai

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் சமூக நலத்துறை சார்பில் இயங்கி வரும் தாம்கோ ஆதரவற்றோர் முதியோர் இல்லம் மற்றும் எட்டுக்குடியில் இயங்கி வரும் பாரதமாதா தாய்வீடு முதியோர் இல்லம் ஆகிய முதியோர் இல்லங்களை மாவட்ட கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார், செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,

சிகிச்சை

தமிழக அரசு மக்களின் நலனுக்கான சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேல்நிலைக் கல்வி, பட்டம், பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண்குழங்தைகள் நலனுக்கான பல உதவித் தொகைகளும், இரண்டு பெண்குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு அக்குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தமிழக அரசு சார்பில் வைப்புத் தொகை நேரடியாக பெற்றோரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. பொதுமக்களின் மேம்பட்ட வாழ்விற்காக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக சமூக நலத்துறையின் சார்பில் முதியோர் இல்லங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வயது முதிர்ந்தவர்கள் வாழும் தெய்வங்கள் ஆவார்கள். தங்கள் குடும்ப சூழ்நிலையினாலும், பிற காரணங்களாலும், தற்போது இத்தகைய கருணை இல்லங்களில் தங்கியுள்ளார்கள். அவர்களது வாழ்காலத்தின் இறுதி நாட்கள் அமைதியாகவும், நிம்மதியுடன் கடற்திட வேண்டும். இங்கு உள்ள முதியோர்களுக்கு நல்ல முறையில் குடிநீர் மற்றும் உணவு வழங்க வேண்டும்..

முதியோர் இல்லங்களின் வரவேற்பறையில், மருத்துவமனையில் பணியிலுள்ள மருத்துவர்களின் அலைபேசி எண்களை கரும்பலகையில் எழுதி வைத்திட வேண்டும். வயது முதிர்ந்த அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது, உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்ள இது உதவியாக இருக்கும். இங்கு பணிபுரியும் அலுவலர்களும், பணியாளர்களும், அவர்களிடம் மிகவும் கனிவாக பழகிடவும் சிறத்தையுடன் உதவிகளை செய்யவும் வேண்டும். ஆதார் பதிவு இல்லாத முதியோர்களுக்கு ஆதார் பதிவு மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செயயப்படவுள்ளன." என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் மாவட்ட சமூக நல அலுவலர்  ஜெயமீனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து