அதிகாரிகளை உருவாக்குவதே மனித நேய மையத்தின் நோக்கம் முன்னாள் மேயர் சைதை துரைசாமி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      சென்னை

 

நல்ல அதிகாரிகளை உருவாக்கு வதே மனித நேய மையத்தின் நோக்கம் என்றும் மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு மனித நேய மையம் நடத்தும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

விழாவுக்கு மனித நேய மையத்தின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.ஓய்வு பெற்ற ஐ..எஸ். அதிகாரி ஜவகர் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நோக்கம்

அதிகாரிகளை உருவாக்குவதே நோக்கம் விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:– தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கடமை உணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். ஜனநாயக கட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டதோ அந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும். அதற்கு நல்ல அதிகாரிகள் தேவை. நல்ல அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் மனித நேய அறக்கட்டளை. மனித நேயம் எந்த பணியில் ஈடுபட்டாலும் வெற்றி பெறுகிறது.அதற்கு காரணம் முகம் தெரியாத மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை சாதி, மதம் பார்க்காமல் திறன் படைத்த மனிதர்களை உருவாக்குகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் மனித நேய மையத்தை சேர்ந்த மாணவர்கள் 7 முறை முதலிடம் பெற்றுள்ளனர் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அதற்கு காரணம் தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்ற 250–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் மனித நேய மைய மாணவர்களை நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்வதே ஆகும் இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து