மத உணர்வை புண்படுத்தியதாக நடிகர் விஜய் தந்தை சந்திரசேகர் மீது வழக்கு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      சென்னை

 

மமத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்..சந்திரசேகர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாந்த் லேப்பில் கடந்த நவம்பர் 22ம் தேதி "விசிறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 வழக்கு

இதில், கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்..சந்திரசேகர் திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் ஜெயபாலாஜி, பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதால் ஐ.பி.சி 295() என்ற பிரிவின் கீழ் எஸ்..சந்திரசேகர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து