செஞ்சிக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      விழுப்புரம்
ginji new year valipaadu

செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

புத்தாண்டு வழிபாடு

ஆங்கில புது வருட பிறப்பை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயருக்கு சந்தனகாப்புஅலங்காரம் செய்விக்கப்பெற்று வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.  நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் வழிபாட்டு மன்ற தலைவர் அரங்க.ஏழுமலை, அருணாச்சல ஈஸ்வரர் கோயில் திருப்பணிக்குழு தலைவர் இந்திராரவிச்சந்திரன், உறுப்பினர் ராஜகுமார்(எ)செல்வம், மற்றும் இ.பி.சேகர், ரவிச்சந்திரன், சோமுசுந்தரம், சண்முகண், தினேஷ்குமார், கண்ணாயிரம் உள்ளிட்ட கமலக்கன்னிஅம்மன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார், செஞ்சி எம்எல்ஏசெஞ்சிமஸ்தான், வல்லம் ஒன்றியக்குழு முன்னால் தலைவர் கு.விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி டிஎஸ்பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து